“இந்தியாவில் வசிக்க பலரும் விரும்பவில்லை..”
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் அண்மையி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது.,புதிதாக கண்டுபிடிப்பவர்களில் பல இந்தியர்கள் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவுக்கு சென்றுவிடுவதாக கூறினார். இது பற்றி கண்டுபிடிப்பாளர்களிடம் கேட்டால் அவர்கள் கூறும் முக்கிய காரணம் , உலகத்தை மாற்ற வேண்டும் என்றும், ஆனால் பலர் இந்தியாவில் மகிழ்ச்சியாக வசிக்க முடியாமல், வெளிநாடுகளுக்கு சென்று விடுவதாகவும் கூறியுள்ளார். புதிய கண்டுபிடிப்புகளை செய்துவருவோர் தங்களை உலகளவுக்கு உயர்த்திக்கொள்ள விரும்புவதாகவும், இளம் இந்தியர்களுக்கு விராட் கோலி போன்ற மனநிலையே இருப்பதாகவும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் டிவிடண்ட்டைஇந்தியா அறுவடை செய்வது கிடையாது என்று கூறிய அவர், மனித முதலீடுகள் மற்றும் திறமைகளை வளர்க்க வேண்டிய தேவை இருக்கிறது என்றார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 விழுக்காடாக இருக்கும் இதே நேரம் சீனா மற்றும் கொரியாவை விட இந்தியா குறைவாக இருப்பதாக ஒப்பிட்டார். திறமையானவர்களுக்கு இந்தியாவில் போதிய அளவுக்கு வேலைவாய்ப்புகளை நாம் தருவதில்லை என்றும் தெரிவித்தார். வேலைவாய்ப்பு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிப் தயாரிப்புக்கு அதிக தொகையை செலவும் செய்யும் இந்தியா,தோல் உள்ளிட்ட துறைகளில் போதுமான அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். வேலைவாய்ப்பு இன்மையின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதாகவும், வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பு மிக மிக எச்சரிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பிஎச்டி படித்தவர்களும் ரயில்வேயில் பியூன் வேலைக்கு விண்ணப்பிக்கும் சூழல் இருப்பதாகவும், அதிகளவில் மக்கள் அரசு வேலைகளுக்கு விண்ணப்பித்து வருவதாகவும் ரகுராம்ராஜன் குற்றம்சாட்டினார்.