வெளிநாட்டு லேப்டாப்களில் புதிய தரக்குறியீடு?
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் லேப்டாப்களுக்கு புதிதாக 2 தரக்குறியீடுகளை அறிமுகப்படுத்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் புதிதாக திட்டம் தீட்டி வருகிறது. புதியமாற்றத்தின்படி,லேப்டாப்,கணினி,டேப்லட்களுக்கு புதிய குறியீடு அளிக்கப்பட இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தினால் அந்த நிறுவனத்துக்கு மதிப்பு உயரும் வகையில் புதிய குறியீடு தயாராகிறது.இந்த மதிப்பு வெளிநாட்டில் இருந்து லேப்டாப்களை இறக்குமதி செய்யும்போது கழித்துக்கொள்ளும் வகையில் திட்டம் தயாராகிறதாம்.உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்து பின்னர் 3 மாத அவகாசத்தை மத்திய அரசு அளித்துள்ளது. புதிய லைசன்ஸ் வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து மட்டுமே லேப்டாப் வாங்க வேண்டும் என்ற விதி விரைவில் அமலாக இருக்கிறது.இந்த புதிய விதி வரும் நவம்பர் 1ஆம்தேதி முதல் அமலாக இருக்கிறது. உள்நாட்டு கட்டமைப்பை எதையும் இறுதி செய்யாமல் திடீரென லைசன்ஸ் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையும் அளிக்கப்பட இருக்கின்றன.
உள்நாட்டில் கட்டமைப்பு வலுவாகும் வரை உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் 2024 கடைசி வரை ஊக்கத் தொகை வேண்டும் என்றும் நிறுவனங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அடுத்ததாக என்ன செய்யலாம் என்பது குறித்து அண்மையில் ஒரு ஆலோசனை கூட்டமும் நடந்ததாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.