எம்.ஜியில் வருகிறது புதிய மின்சார கார்!!!!
மோரிஸ் கராஜ் என்ற பிரபல பிரிட்டன் கார் நிறுவனம் தனது புதிய மின்சார காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எம்.ஜி.காமெட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய குட்டி பேட்டரி காரின் விலை இந்திய மதிப்பில் 7 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தயா முழுக்க டீலர்ஷிப்பையும் அந்த நிறுவனம் விரிவுபடுத்தி வருகிறது.இந்த வண்டியை வாங்க வரும் 15ம் தேதி முதல் புக்கிங் தொடங்கப்படுகிறது. இம்மாதம் இறுதியில் இந்த வண்டிகள் டெலிவரிக்கு கிடைக்க இருக்கிறது. அப்படி இந்த வண்டியில் என்னதான் இருக்கிறது என்போருக்கு இதோ விவரம்.. இந்த வாகனம் லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கக்கூடியது 17.3 கிலோவாட் திறன் கொண்டதாகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 230 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது. 42 பிஎச்பி சக்தி கொண்ட மோட்டர் இந்த வண்டியின் சிறப்பம்சமாகும். இந்த வண்டியை முழுமையாக சார்ஜ் செய்ய 7 மணி நேரம் தேவைப்படுகிறது. டாடா டியாகோ,சிட்ரியான், டிகோர் ரக கார்களுடன் போட்டி போடும் அளவுக்கு இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.