பாக்ஸ்கான்ல புது மின்சார வாகனமா..?
உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த சூழலில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்தியாவில் அதிக பணிகளை முயற்சி செய்து வருகிறது. அண்மையில் அந்த நிறுவனத்தின் சிஇஓ young liu பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். நிலைமை இப்படி இருக்கையில் அவர் தைபேயில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் தங்கள் நிறுவன செயல்பாடுகளை விரிவுபடுத்த உள்ளதாக குறிப்பிட்டார். அதிலும் குறிப்பாக இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியில் பாக்ஸ்கான் ஈடுபட இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கான இடங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாடும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. விநியோக சங்கிலியை வலுப்படுத்த சீனாவுக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டநிலையில் அதே வளர்ச்சி இந்தியாவில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பாக்ஸ்கான் நிறுவனம் தனது ஆலையை தொடங்கி பணிகளை செய்து வருகிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யும் பணிகளை செய்து வருகிறது.அந்நிறுவனத்துக்கு இந்தியாவில் 30க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. இதன் கூட்டு மதிப்பு மட்டும் 10பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகும். தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா , தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்து வரும் பாக்ஸ்கான் நிறுவனம் தற்போது மின்சார கார்களுக்கான ஆலையை எங்கு அமைக்க இருக்கிறது என்பதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடும் அந்த நிறுவனத்தின் பரிசீலனையில் இருப்பதால் இன்னும் கூட அதிக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.