6 நாட்களுக்கு ஒரு புது பிளேன்…
உப்பு முதல் விண்வெளி வரை எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் டாடா குழுமத்தின் வசம் தற்போது ஏர் இந்தியா விமான நிறுவனம் உள்ளது. அரசிடம் இருக்கும்போது கிடந்த கொட கொடா விமானங்களை புதிதாக மாற்றவும் வணிகத்தை விரிவுபடுத்தவும் டாடா குழுமம் பணிகளை செய்து வருகிறது. 2024ஆம் ஆண்டு இறுதி வரை 6 நாட்களுக்கு ஒரு புது விமானம் டாடா குழுமத்திடம் அளிக்கப்படும் என்று தலைமைசெயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் என்பவர் தெரிவித்துள்ளார்.
ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற விமான சேவையின் ,மேம்பாட்டு நிகழ்ச்சியில் கேம்ப்பெல் இதனை தெரிவித்தார்.70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களிடம் இருந்து புதிய விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டமிட்டு இருக்கிறது.இதன் ஒரு பகுதியாக வரும் நவம்பர் முதல் விமானங்கள், ஏர் இந்தியா நிறுவனத்திடம் ஒப்படைக்கத் தொடங்க இருக்கிறது. ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றஉம் AIXconnect நிறுவனங்களின் இணைப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளதாகவும் கேம்ப்பெல் வில்சன் தெரிவித்திருக்கிறார். வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதுப்புது விமானங்கள், பல அதிரடி மாற்றங்களை ஏர் இந்தியா நிறுவனம் செய்து வருகிறது.