இந்தியாவுக்கு வந்துள்ள புது பிரச்சனை..
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் சீனா இருக்கிறது. சீனாவின் மக்கள் தொகையில் இளைஞர்களின் அளவை விட 60 வயதை கடந்தவர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர். இதே மாதிரிய ஒரு பிரச்சனை இந்தியாவையும் பாதிக்க இருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு போதிய வருவாய் இல்லாமல் இருக்கும் சூழலில், அவர்களை பார்த்துக்கொள்வதற்கு புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வரும் பட்ஜெட்டில் இது தொடர்பாக குறிப்பாக முதியோருக்கு உதவும் வகையிலான திட்டங்கள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் புதிய பிரச்சனையாக இளைஞர்கள் மத்தியில் இனப்பெருக்கத்தில் பெரிய தயக்கமும், ஆர்வமின்மையும் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் இளைஞர்களின் சராசரி வயது 29 ஆக உள்ளது. 2050-ல் 5-ல் ஒருவர் 60 வயதை கடந்திருப்பார்கள். இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை உயர்ந்துகொண்டே வருகிறது. 2010-ல் இருந்ததை விட தற்போது முதியோரின் மக்கள் தொகை அதிகமாக உள்ளது தெரியவந்தது. பிரான்ஸ் மாதிரியான நாடுகளில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க 100 ஆண்டுகள் வரை தேவைப்பட்ட நிலையில் இந்தியாவில் இந்த எண்ணிக்கை வெறும் 20 ஆண்டுகளில் நடந்துள்ளது. மக்கள் வாழும் சராசரி காலம் கடந்த 1950-ல் 12 ஆண்டுகள் கூடியிருந்த நிலையில், கடந்த 2014-18 காலகட்டத்தில் மேலும் 18 ஆண்டுகள் உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் 65 விழுக்காடு மூத்த குடிமக்களுக்கு எந்தவித நிதி பாதுகாப்பும் இல்லாத சூழல் காணப்படுகிறது. உடல்நலத்தில் இந்தியாவில் வசிக்கும் முதியோரில் 52 விழுக்காடு பேர் ஏதேனும் ஒரு உடல்நல பிரச்சனையுடன் வாழ்கின்றனர். இந்தியாவில் 31 விழுக்காடு மூத்த குடிமக்களிடம் மட்டும்தான் சுகாதார காப்பீடு இருக்கிறது. போதுமான விழிப்புணர்வு இல்லாமையும், ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க பணம் இல்லாததும், தேவையில்லை என்று நினைப்பதும் ஹெல்த் இன்சூரன்ஸ் தேவையை இந்தியாவில் வெகுவாக பாதிக்கிறது.