தயாராகிறது அமெரிக்காவுடன் புதிய வரி ஒப்பந்தம்….
அமெரிக்க நிதியமைச்சர் ஜானட் எல்லன் இந்தியாவுக்கு வந்துள்ளார். காந்திநகர் வந்த அவர் அண்மையில் நடந்த ஜி20 மாநாட்டு அமர்வு கூட்டத்தில் நிதியமைச்சர் அம்மையார் நிர்மலா சீதாராமனுடன் பேசினார். அப்போது இந்தியா-அமெரிக்கா இடையே இரு தூண்கள் வரி சலுகை அறிமுகம் செய்வது பற்றி ஆலோசித்தார். அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக இணைந்து உலகளவில் நிகழும் பிரச்னைகள் மற்றும் அமெரிக்காவுக்கு சென்ற இந்திய பிரதமருடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து ஆராய்ந்தார். அமெரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, இந்தியா அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்தியதாக கூறினார். காலநிலை மாற்றம்,வளர்ச்சி வங்கி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளின் நிலைகள் குறித்தும் விவாதித்தனர். மேலும் கிரிப்டோகரன்சியில் இருநாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைகள், டிஜிட்டல் பொதுகட்டமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் விவாதித்தனர். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் முயற்சியால் 200 பில்லியன் அமெரிக்க டாலர் திட்டங்கள் செயல் வடிவம் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பெருந்தொற்று மற்றும் உலக பொருளாதாரம் குறித்தும்,காலநிலை மாற்றத்துக்கு செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இரண்டு நாட்டு நிதியமைச்சர்களும் ஆலோசித்தனர். உலகவங்கித்தலைவராக இந்திய வம்சாவளியினர் இருப்பது குறித்தும் அவர்கள் இருவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.