ஒரு ஜோடி ஷூ 41 லட்சம் ரூபாயா..?
ஆப்பிள் நிறுவனம் இப்போது வேண்டுமானால் முன்னணி டெக் நிறுவனமாக இருக்கலாம் ஆனால் 90களில் மிக சாதாரண நிறுவனமாகவே திகழ்ந்தது. இந்த நிறுவனம் அப்போதே தனது பணியாளர்கள் மீது கவனம் கொண்டிருந்தது. அவர்களுக்காக பிரத்யேக ஷூக்களை ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வழங்கியது. அப்படி ஆப்பிள் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஷூக்கள் தற்போது ஏலத்துக்கு வந்துள்ளன. டிரெய்னர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஷூக்களின் ஒரு ஜோடி விலை இந்திய மதிப்பில் 41 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை வாங்கவும் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வெள்ளை நிறத்தில் வானவில் நிறத்தில் உருவாக்கப்பட்ட இந்த காலணிகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. ஆப்பிள் நிறுவனம் முதலில் விற்ற பொருட்கள் வைத்திருப்போர், 30 ஆண்டுகளுக்குள் அதனை தற்போது விற்றால் அதன் மதிப்பு பல மடங்கு உள்ளன என்பதற்கு இந்த ஷூவும் ஒரு சான்றாகும். ஆப்பிள் முதல் முதலில் விற்ற கணினிகள், ஐபாட்களைஉலகின் பல நாடுகளிலும் சேகரிப்பவர்கள் மிகுந்த ஆர்வமாக தேடி வருகின்றனர். ஆப்பிள் நிறுவனம் அப்போது சாதாரண நிறுவனமாக தோன்றியது ஆனால் காலப்போக்கில் உலகின் தவிர்க்க முடியாத பிராண்டுகளில் உலகிலேயே பெரிய ஜாம்பவானாக இந்த நிறுவனம் வலம் வருகிறது.