118 ஆண்டுகளில் இல்லாத சாதனை!!!
சொகுசு கார்களின் மன்னன் என்று வர்ணிக்கப்படும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது 118 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத அளவாக கடந்த ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் 6ஆயிரத்து 21 சொகுசு கார்களை விற்றுள்ளது ரோல்ஸ் ராய்ஸ் காரில் அதிநவீன ஸ்பெக்டர் ரக மின்சார கார்கள் தயாரிக்க ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இந்த வகை கார்களின் தனித்துவம் யாதெனில் ,வாடிக்கையாளர் கேட்கும் அம்சங்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது சொகுசு காரில் செய்து தந்துவிடும் என்பதே. Cullinan model என்ற ரக ரோல்ஸ் ராய்ஸ் ரக கார்தான் அந்நிறுவனத்தில் மிகவும் சொகுசான காராக பார்க்கப்படுகிறது.இதற்கு அடுத்த இடத்தில்,நடிகர் விஜய் வைத்திருக்கும் கோஸ்ட் ரக கார்களே பெரிய பணக்காரர்கள் விரும்பி வாங்கும் கார்களின் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளது இந்த வகை கார்களுக்கு மத்திய கிழக்கு நாடுகள்,ஆசிய பசிபிக் மற்றும் அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பு கடந்தாண்டு இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
1904ம் ஆண்டு முதல் சொகுசு கார்களை தயாரித்து வரும் அந்நிறுவனம், கடந்தாண்டு அந்த நிறுவன வரலாற்றிலேயே மிக்ககுறைந்த விலை கொண்ட காராக 3 லட்சத்து 11ஆயிரத்து 900 டாலருக்கு ஒரு காரை உற்பத்தி செய்தது குறிப்பிடத்தக்கது.