400 ரூபாயை நெருங்கும் பங்கு அசத்தலான பங்கு!!!
ஐடிசி நிறுவன பங்குகள் 400 ரூபாய் என்ற விலையை எட்ட 3%மட்டுமே குறைவாக உள்ளது.மத்திய நிதியமைச்சர் நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் புகையிலை அதுவும் குறிப்பாக சிகரெட் விலை உயரும் என்று அறிவித்திருந்தார். வியாழக்கிழமை வர்த்தக நேர முடிவில் ஐடிசி நிறுவன பங்குகள் விலை ரூ378 ஆக உயர்ந்திருந்தது.NCCDவரி 16%ஆக உயர்ந்துள்ள நிலையில்,ஒரு சிகரெட்டில் மொத்த வரி 52.7% என்றால் அதில் NCCD10ஆக மாறும் புகைப்பிடிப்பவர்களை குறைக்கும் நோக்கில் உலக சுகாதார அமைப்பு புகையிலை மீதான வரிகளை 75% ஆக அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது. சிகரெட் மீதான வரி உயரும்போது ,அதன் விலையும் உயரும் என்பதால் இந்தியன் டுபாக்கோ கம்பெனி எனப்படும் ITCநிறுவனத்தின் பங்குகளும் உயரும். இதன் காரணமாகவே இந்திய புகையிலை நிறுவனமான ஐடிசியின் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. இதனால் இந்த பங்குகளை வாங்கியிருந்தவர்களுக்கு தற்போது கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.