ஒரு கிராமத்துக்கே திடிரென கொட்டிய பணமழை..
உங்கள் வங்கிக்கணக்கில் திடீரென சம்பந்தமே இல்லாமல் புதிதாக பணம் வந்தால் என்ன செய்வீர்கள்,உடனடியாக ஸ்டேட்மண்ட் எடுத்துப்பார்ப்போம்,இல்லை யாரிடம் இருந்து வந்திருக்கிறது என்று வங்கியில் விசாரிப்போம்,அதிலும் சிலர் சாமர்த்தியமாக இருந்தால் ஒரு பைசா கூட விடாமல் எடுத்து ஜாலியாக செலவு செய்வீர்கள்தானே, இப்படி கேட்கவே நல்லாத்தான் இருக்கிறது. ஆனால் நிஜத்தில் எப்போதாவதுதான் அரிதாக நடக்கும் ஆனால் , ஒடிசாவில் நிஜத்தில் ஒன்றல்ல,இரண்டல்ல ஒரு குறிப்பிட்ட வங்கிக்கிளையில் கணக்கு வைத்திருந்த நூற்றுக்கணக்கானோர் திடீரென பணத்தை எடுக்க நீண்ட வரிசையில் வந்து நின்றுவிட்டனர். என்னவென்று புரியாமல் வங்கி பணியாளர்கள் குழப்பமடைந்தனர்.
கிடைத்த வரை லாபம் என்று பலரும் தங்கள் வங்கிக்கணக்கில் வந்து விழுந்த பணத்தை எடுத்துச்சென்றுவிட்டனர்.
ஒன்றல்ல இரண்டல்ல, 300 பேருக்கு 20,000 முதல் 3 லட்சம் ரூபாய் வரை வங்கிக்கணக்கில் திடீரென வரவு வைக்கப்பட்டுள்ளது. யாரிடம் இருந்து வந்தது என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. Kendrapara என்ற பகுதியில் உள்ள ஒடிசா கிராமிய வங்கியில்தான் இந்த ருசிகரம் நடந்திருக்கிறது. திடீரென யாரிடம் இருந்து இவ்வளவு பணம் வந்தது என்பது தெரியாத நிலையில் வங்கிக் கணக்கில் பணம் வந்ததும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். யாரிடம் இருந்து இந்த பணம் வந்தது என்பது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ச்ச நமக்கு இதுபோல நடக்கவில்லையே என்பது நீங்கள் எதிர்பார்ப்பது புரிகிறது. கவலைப்படாதீர்கள் நல்லதே நடக்கும்.