படித்தொர பாண்டி ஸ்டைலில் நெட்பிளிக்ஸுக்கு வரி..
நெட்பிளிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம் கடந்த 2016-ல் இந்தியாவில் தனது சேவையை தொடங்கியது.இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் 60லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். பெருந்தொற்று நேரத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் வருவாய் 1529கோடி ரூபாயாக அதிகரித்தது.இந்த நிலையில் இந்தியாவில் சேவை வழங்கி வரும் நெட்பிளிக்ஸ்க்கு பெரிய தொகையை வரியாக கேட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு வெளிநாட்டு நிறுவனம் தனது டிஜிட்டல் சேவைக்கு இந்தியாவில் வரி கட்டுவது இதுவே முதல்முறையாகும். நெட்பிளிக்ஸ் பார்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்றனர்.அதாவது நெட்பிளிக்ஸ் பார்ப்போரின் அளவு 30விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் இந்திய பிரிவு அதிகாரி தெரிவிக்கிறார்.உலகத்திலேயே அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்ற பெருமையை இந்தியா கடந்தாண்டு கொண்டருந்ததாக நெட்பிளிக்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இன்னும் 9 மாத காலகட்டத்திற்குள் வரி செலுத்துவது தொடர்பாக சட்ட சிக்கல்களை சரி செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் நெட்பிளிக்ஸ்க்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது. உள்ளூரில் சேவை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வரியாக செலுத்தவேண்டும் என்ற விதியின் அடிப்படையில்தான் வரியை கேட்பதாக இந்திய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் இறுதிகட்ட முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்திய சினிமாக்களை உலகின் பலநாடுகளிலும் நெட்பிளிக்ஸ் வழியாக பார்ப்பதாகவும் அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.