வருங்கால வைப்பு நிதிக் கணக்கோடு, ஆதாரை இணைப்பது கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு
வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு என்று வரிசையாக ஆதாரை இணைத்ததன் தொடர்ச்சியாக இப்போது வருங்கால வைப்பு நிதிக் கணக்கோடு (Provident Fund Account) ஆதார் இணைக்கப்பட வேண்டும், சமூகப் பாதுகாப்பு சட்டப்பிரிவு 142 இன் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கணக்கு வைத்திருப்பவர்கள், இனி வரும் காலங்களில் பணம் எடுப்பது, ஓய்வூதியம் பெறுவது மற்றும் காப்பீட்டுப் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் விவரங்களை உங்கள் கணக்குடன் இணைப்பது அவசியம்.
நிறுவனங்கள் அல்லது முதலாளிகள், தங்கள் பணியாளர்களின் ஆதார் எண்ணை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வருங்கால வைப்பு நிதிக் கணக்கோடு இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை நிறுவனங்களின் வருங்கால வைப்பு நிதிக்கணக்கு வெளி ஒப்பந்த நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சூழலில், அந்த ஒப்பந்த நிறுவனம் குறித்த தகவல்களை நிறுவனங்கள் தொடர்புடைய வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்குத் தெரிவிப்பது மட்டுமில்லாமல், தங்கள் இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள், தங்கள் பணியாளர்கள் எளிதாக ஆன்லைன் மூலமாக நிதியைத் திரும்பப் பெறுவதற்காக விண்ணப்பிப்பது மற்றும் ஓய்வூதியம் மற்றும் காப்பீடு தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதற்கான இணைப்பு உறுப்பினர் லாகின் (Login) செய்யும் முகப்புப் பக்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் குறித்த தகவலானது வருங்கால வைப்பு நிதி ஆணையர் -1, மண்டல அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இணையதளத்தில் எப்படி ஆதாரை இணைப்பது?
தனி உறுப்பினர்கள், வருங்கால வைப்பு நிதிக் கணக்கோடு உங்கள் ஆதார் எண்னை இணைக்க கீழ்க்கண்ட குறிப்புகளை பின்பற்றலாம்:
1) Visit : epfindia.gov.in
2) In the Online Services tab, click on E-KYC Portal
3) Enter your Aadhaar number, and wait for the OTP to be generated
4) Fill in your Aadhaar number again and verify the OTP
5) Your Aadhaar will be linked with your PF account