A/C விற்பனை மந்தம்..
முன்கூட்டிய மழை, மழைக்காலம் முன்கூட்டியே தொடங்கியதாலும், வெப்பநிலை குறைந்ததாலும் முதல் காலாண்டில் மின்விசிறிகள், குளிர்சாதனப் பெட்டிகளுக்கான தேவை குறைந்து, விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டது.
விற்பனை ஆகாமல் தேங்கியுள்ள பொருட்களை விற்று, விற்பனையை அதிகரிக்க நிறுவனங்கள், மழைக்காலத்திற்குப் பிறகு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், பண்டிகைக் காலங்களில் தேவை மீண்டும் அதிகரிக்கும் என்றும் நம்புகின்றன.
தேவையில் சரிவு
நாட்டின் பல பகுதிகளில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதாலும், வெப்பநிலை எதிர்பார்த்ததை விட குறைந்ததாலும், மின் விசிறிகள், குளிர்சாதனப் பெட்டிகளுக்கான தேவை குறைந்தது.
இதனால் இந்த பொருட்கள் உற்பத்தியாளர்களின் விற்பனை கணிசமாகக் குறைந்து, அவர்களின் செயல்பாடுகளில் சரிவு ஏற்பட்டது.
விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
விற்கப்படாமல் உள்ள பெரிய அளவிலான பொருட்களைக் கையிருப்பு வைத்திருக்கும் மின்விசிறி மற்றும் குளிர்சாதனப் பெட்டி நிறுவனங்கள், பண்டிகைக் காலங்களில் தேவை மீண்டும் அதிகரிக்கும் என்றும், மழைக்காலத்திற்குப் பிறகு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் நம்புகின்றன.
இது இரண்டாம் அரையாண்டில் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
சவாலான சூழல்
“குளிரூட்டும் பொருட்களின் விற்பனைக்குச் சவாலான சூழல் நிலவியதால், இது ஒரு மந்தமான காலாண்டாக அமைந்தது.
இருப்பினும், இத்துறையில் எங்கள் சந்தைப் பங்கு 14 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடுகிறோம். இப்போதைய சூழல் சவாலாக இருந்தாலும், இந்த பிரிவின் அடிப்படை வலிமையின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
பண்டிகைக் காலத்தில் தேவை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதால், இந்த காலகட்டத்தை திறம்பட சமாளிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” என ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் குழும தலைமை நிதி அதிகாரி நிகில் சோஹோனி கூறினார்.
