அம்பானி ஃபர்ஸ்ட், அதானி செகண்ட்..
ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்திருக்கிறார்.உலகளவில் இவர் 9 ஆம் இடத்தை பிடித்திருக்கிறார். இவரின் சொத்துமதிப்பு குறுகிய காலத்தில் 39.76 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கிளப்பில் இணைந்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 116 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இந்திய அளவில் முகேஷ் அம்பானிக்கு அடுத்த இடத்தில் கவுதம் அதானி உள்ளார். அவரின் சொத்துமதிப்பு 84 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. மகளிர்பிரிவில் ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்த சாவித்ரி ஜிண்டால் முதலிடம்படித்திருக்கிறார். அவரின் சொத்துமதிப்பு 33.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. கடந்தாண்டு இந்திய அளவில் இருந்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 169 ஆக இருந்தது, இது நடப்பாண்டு 200 ஆக உயர்ந்திருக்கிறது. 2023-ல் இருந்ததை விட 41 விழுக்காடு மொத்த சொத்துமதிப்பு உயர்ந்திருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள 25 பேர் புது முகங்கள். இந்த பட்டியிலில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலமாக பைஜூஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்திரன் உள்ளார். உலகளவில் பெரிய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2781 ஆக உயர்ந்திருக்கிறது. இது முந்தைய ஆண்டைவிட 141 பேர் அதிகமாகும்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட்233 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ,இவருக்கு அடுத்த இடத்தில் எலான் மஸ்க் உள்ளார். எலான் மஸ்கின் சொத்துமதிப்பு 195பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பர்க் உள்ளார். அவரின் சொத்துமதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் லாரி எலிசன், வாரன் பஃபெட், பில்கேட்ஸ், ஸ்டீவ் பால்மெர் ஆகியோரும், 9 ஆவது இடத்தில் முகேஷ் அம்பானியும், 10 ஆவது இடத்தில் லாரி பேஜும் உள்ளனர். உலகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான பணக்காரர்கள் கொண்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. இந்த நாட்டில் மட்டும் 813 கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் சீனா இருக்கிறது. சீனாவில் 473 பெரும்பணக்காரர்கள் இருக்கின்றனர். 3 ஆவது இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. 200 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் இருப்பதாக ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது.