பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி முடிவு!!
கார் தயாரிப்பில் சிறந்து விளங்கும் இந்திய நிறுவனங்களில் ஒன்றாக மகேந்திரா நிறுவனம் திகழ்கிறது. கார் மட்டுமின்றி டிராக்டர், சரக்கு வாகனங்களையும் அந்நிறுவனம் தயாரித்து அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று வருகிறது. இந்த சூழலில் அந்த நிறுவனத்தின் மின்னணு பிரிவு அதன் துணை நிறுவனத்துக்கு கைமாற உள்ளது.அதாவது மகேந்திரா நிறுவனத்தின் மின்சார பயணிகள் வாகனத்தின் சொத்துகள் மட்டும் தனது துணை நிறுவனத்துக்கு வரும் 2026ம் ஆண்டுக்குள் மாற்றப்பட உள்ளது. 2022ம் நிதியாண்டின் தரவுகளின்படி செயல்பாட்டில் உள்ள மூலதனம் மட்டும் 230 கோடி ரூபாயாக உள்ளது. இது அந்த நிறுவன மொத்த மதிப்பில் பூஜ்ஜியம் புள்ளி 6 விழுக்காடாகும். மகேந்திரா அன்ட் மகேந்திராவில் இருந்து மகேந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிட்டட் என்ற MEAL குழுவுக்கு நிதி செல்ல இருக்கிறது. மின்சார வாகன உற்பத்தியை கடந்தாண்டே துவங்கி MEAL நிறுவனம் இதற்காக ஏற்கனவே பிரி்ட்டனைச் சேர்ந்த் சர்வதேச முதலீட்டு நிறுவனத்திடம் ஆயிரத்து 925 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. இரண்டு கட்டங்களாக இந்த நிதி மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய பயன்பட உள்ளது. முதல்கட்டமாக ஆயிரத்து 200 கோடி ரூபாய் இந்தாண்டு ஜூனில் வரும் என்று எதிர்பார்த்திருந்த சூழலில், 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி இந்தியாவுக்கு வர உள்ளன. இதேபோல் 700 கோடி ரூபாய் பணம் இரண்டாம் கட்டமாக வர உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மகேந்திராவின் விற்பனை , கார்கள் மற்றும் விவசாய பொருட்களும் எதிர்பார்ப்பை விட அதிக லாபத்தை ஈட்டித் தள்ளியுள்ளது.