சொமேட்டோ செய்த அதிரடி..
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோ, தனது பேமண்ட் அக்ரிகேட்டர் லைசன்சை திரும்ப அளித்துள்ளது.
இதனை பங்குச்சந்தையில் சொமேட்டோ தெரிவித்துள்ளது. குர்கானை தலைமை இடமாக கொண்டு இயங்கும் சொமேட்டோ நிறுவனம், 39 கோடி ரூபாய் மதிப்புள்ள தொகையை திரும்ப அளித்துள்ளது. போதுமான அளவுக்கு வருவாய் இல்லாததாலும், இழப்பை தடுக்கும் நோக்கிலும் இந்த செயலில் சொமேட்டோ ஈடுபட்டுள்ளது. அண்மையில்தான் ரிசர்வ் வங்கியிடம் அந்நிறுவனம் ஒப்புதல் வாங்கியிருந்த நிலையில் திடீரென தனது பேமண்ட் லைசன்சை திரும்ப அளித்துள்ளது. பேமண்ட் வணிகத்தில் பெரிய போட்டியுள்ளதால் தற்காலிகமாக அந்த வணிகத்தில் இருந்து விலகுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஒரு பக்கம் கேஓய்சி எனப்படும் வாடிக்கையாளர் விவரங்களை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்து வரும் நிலையில் சொமேட்டோவின் இந்த முடிவு சந்தையில் பேசு பொருளாகியுள்ளது. புதுவரவாக இருந்த சொமேட்டோ பேமண்ட்ஸ், திடீரென இப்படி விலகியது மற்ற போட்டியாளர்களான ரேசர்பே மற்றும் கேஷ்ஃபிரீ ஆகிய நிறுவனங்களுக்கு மேலும் சாதகமாக அமைந்துவிட்டது.