மேலும் கடன் வாங்கும் அதானி
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின், கட்ச் காப்பர் நிறுவனம், சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்திக்காக, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் சில பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து அதானி நிறுவனம் 6 ஆயிரத்து 71 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின், கட்ச் காப்பர் நிறுவனம், சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்திக்கான கிரீன்ஃபீல்ட் செப்பு சுத்திகரிப்பு திட்டத்தை அமைப்பதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத் திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன்கள் காப்பரை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான நிதியை முதல் கட்டமாக பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு மூலம் 6 ஆயிரத்து 71 கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளது. இது பாரத ஸ்டேட் வங்கியிடம் மட்டும் இல்லாமல் கூடுதலாக சில பொதுத்துறை வங்கிகளிடமும் கடன் பெற்றுள்ளது. கடன் பெற்ற வங்கிகளின் பட்டியலில், பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, எக்ஸிம் வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஆகியவை வங்கிகள் ஆகும். கட்ச் காப்பர், அதானி போர்ட்ஃபோலியோவின், பொருட்கள், உலோகங்கள் மற்றும் சுரங்க சொத்துக்களின் ஓரு பகுதியாக இருக்கும்.
அண்மையில் தொழிலதிபர் கவுதம் அதானி தனது 60-வது பிறந்த நாளன்று சமூக நலத் திட்டங்களுக்காக ரூ. 60 ஆயிரம் கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது