அதானி குழுமம்தான் ஆட்டம் கண்டது ஆர்பிஐ இல்ல..!!!
அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதானி குழுமத்தின் 7 நிறுவன பங்குகள் சரிவை கண்டுள்ளன. இந்த சூழலில் அதானி குழுமத்துக்கு கடன் கொடுத்த வங்கிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டது. இந்த சூழலில் வங்கிகளின் கட்டமைப்பு மிக வலுவாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. போதுமான மூலதனம், பணப்புழக்கம்,லாபகரமான இயக்கம் உள்ளிட்ட அம்சங்கள் வங்கிக் கட்டமைப்பில் வலுவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வங்கித்துறைக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா என்பதை இந்திய ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் தரும் வங்கிகள், யாருக்கு கடன் தந்துள்ளோம் என்பதை அறிவிக்கும் புதிய அமைப்பான Central Repository of Information on Large Credits அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தில் 7 நிறுவனங்கள் அதன் சந்தை மதிப்பில் பாதிக்கும் அதிகமாக கடந்த சிலநாட்களில் இழந்துள்ளன.ஹிண்டன்பர்க் அறிக்கையால் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2,3ம் இடங்களில் இருந்த அதானி தற்போது 22வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதானி குழுமத்துக்கு 27ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடனாக வழங்கியுள்ளதாகவும் இது வெறும் 0.88% மட்டுமே என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியும் வெறும் 7 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே அதானி குழுமத்துக்கு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது