அதானிக்கு அடிச்சது ஜாக்பாட்!!!
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை அதானி குழும பங்குகள் திடீர் ஏற்றம் பெற்றன. விசாரிக்கையில் அதானி குழுமத்துக்கு அமெரிக்காவின் GQG நிறுவனம் இந்திய ரூபாயில் 15ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகள் செய்தது தெரியவந்தது.அதாவது 1.87 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை முதலீடுகளை அமெரிக்க நிறுவனம் அதானி குழுமத்தில் இறக்கியுள்ளது. இதன் காரணமாக அதானி குழுமத்தில் இடம்பிடித்துள்ள,அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவன பங்குகள் 10 விழுக்காடு உயர்ந்து ஆயிரத்து 778 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதானி குழுமத்தின் துறைமுக பங்குகள் 6.66% அதானி டிான்ஸ்மிஷன் பங்குகள் மற்றும் அதானி கிரீன் எனர்ஜீஸ் நிறுவன பங்குகள் தலா 5% ஏற்றம் பெற்றன. அமெரிக்க நிறுவனத்தின் இந்த திடீர் ஆதரவால் அதானி குழும பங்குகள் 12, 771 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதானி குழுமத்துக்கு முன்பாக குறிப்பிட்ட இந்த அமெரிக்க நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தங்கள் வாடிக்கையாளர்களின் சொத்துகளை நிர்வகித்து வருகிறது. ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கையால் சரிந்து கிடந்த அதானி குழும பங்குகள் தொடர் சரிவில் இருந்து மீண்டு லாபத்தை பதிவு செய்யத் தொடங்கியுள்ளதால் இந்திய முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். இதனால் வரும் நாட்களிலும் அதானி குழும பங்குகள் உயரவே அதிக வாய்ப்புள்ளதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.