1 பில்லியன் டாலர் முதலீடுகளை இறக்கும் அதானி..
பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி தனது அதானி கிரீன் நிறுவனத்தில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடுகள் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. குறிப்பிட்ட அந்நிறுவனத்தின் கடன் பத்திரங்கள் அடுத்தாண்டு முதிர்ச்சி அடைந்துவிடும் சூழல் இருக்கிறது. நிறுவனத்தை விரிவுபடுத்தும் முயற்சியாகவும், மீண்டும் நிதியை வியாபாரத்துக்குள் இறக்கவும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதானி குழுமத்தில் இயக்குநர்கள் குழு நிதியை உயர்த்துவது குறித்து வரும் 26 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்குகளை விற்பது மற்றும் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள நிதியை விடுவிப்பதும் முதலீட்டின் ஒரு அங்கமாக அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனினும் அதிகாரபூர்வமாக இந்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. பசுமை ஆற்றல் பக்கம் மாறுவதற்காக 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிறுவனம் 10 ஆண்டுகளில் முதலீடு செய்ய இருக்கிறது. 2030ஆம் ஆண்டுக்குள் 45 ஜிகாவாட் அளவு பசுமை ஆற்றலை உற்பத்திசெய்ய அதானி குழுமம் பணிகளை செய்து வருகிறது. 1.2 பில்லியன் அளவுக்கு பத்திரங்கள் 8 வங்கிகளில் இருந்து கடனாகவும் சில முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் புகார்களை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் கூறிய புகார்களால் 150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை அதானி குழுமம் இழந்திருக்கிறது. புகார்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அரபு நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இருந்து முதலீடுகள் பெறப்பட்டுள்ளதால் அதானி குழுமம் மீண்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
இலங்கையில் துறைமுகத் திட்டத்துக்கு அதானி குழுமம் ஆர்வம் காட்டி வருகிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானபோதும் அதானி குழுமத்துக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்ற நிலையே தொடர்கிறது.
அதானி குழுமத்தில் கிரீன் பங்குகள் 25%இந்தாண்டு சரிந்தன. அதே நேரம் உச்சநீதிமன்றம் அதானி குழுமம் பற்றி கருத்து தெரிவித்த பிறகு 55%உயர்ந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.