அதானி Vs அம்பானி..!!!
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தின் மீது ஜனவரியில் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. அதானி குழுமத்தின் சாம்ராஜ்ஜியத்தை ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு சரித்துவிட்டது என்றே சொல்லலாம். இதனால் அதீத கடன் வாங்கியுள்ள அதானி, பெரிய பெரிய வணிக திட்டங்களை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
நிலைமை இப்படி இருக்கையில் அவர் தனது உள்கட்டமைப்பு துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சிமெண்ட் மற்றும் துறைமுக துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அதேநேரம், FMCG எனப்படும் சந்தையில் வேகமாக விற்கப்படும் வாடிக்கையாளர்கள் பொருட்கள் விற்பனைத்துறையில் அதானி கால்பதிக்க ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் ஃபார்ச்சூன் நிறுவனத்தின் நஷ்டத்தால் அதானி வில்மர் கூட்டு நிறுவனத்தில் இருந்து அதானி வெளியேற திட்டமிட்டுள்ளார்.
அதானி ஒரு பக்கம் FMCG துறையில் இருந்து வெளியேற விரும்பும் இதே நேரம் ரிலையன்ஸ் மற்றும் டாடா குழுமங்கள் இந்த துறையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். FmCGதுறையில் அம்பானி சிறிதும் பெரிதுமாக ஏகப்பட்ட நிறுவனங்களை வாங்கியிருக்கிறார்.டாடா நியூ செயலி மூலம் மட்டும் வணிகத்தை மேம்படுத்த அம்பானி காய்நகர்த்தி வருகிறார்.
இந்தியாவில் FMCG மற்றும் சில்லறை விற்பனைத்துறை 2032ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 9 முதல் 10%வளர்ச்சி அடையும் என்றும் 2டிரில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகம் நடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. FMCG துறையில் பல கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும் நிலையில், அம்பானியால் அதை எளிதாக செய்ய முடியும் அதேநேரம்,அதானியிடம் போதிய சந்தை மூலதனம் இல்லாமல் FMCGதுறையில் இருந்து வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவில் ஐடிசி, நெஸ்லே, யுனிலிவர் நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் செல்போன் வாடிக்கையாளர்களை வைத்து ஜியோ நிறுவனம் சில்லறை வணிகத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.