அதானியின் அடுத்த அதிரடி : இந்த முறை உலகளவிலான திட்டம்!!!
10ம் வகுப்பு கூட தாண்டாத நபரான கவுதம் அதானி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக பங்குச்சந்தை பிரிவில் கொடிகட்டி பறந்து வருவதுடன் அனைத்துத் துறைகளிலும் நன்கு அறியப்பட்ட பிரபலமாக வலம் வந்தார். ஆனால் ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை அதானி குழுமத்தின் சொத்துகளை காலி செய்து வருகிறது. இந்த நிலையில் மனம் தளராத அதானி, அடுத்தகட்டமாக வெளிநாட்டு நிதியை களமிறக்க திட்டமிட்டுள்ளார். ஒன்றிரண்டு அல்ல 500 மில்லியன் அமெரிக்க டாலரை திரட்ட அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் இது தொடர்பான அறிவிப்பு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. . ஏற்கனவே 2 சிமெண்ட் நிறுவனங்களை வாங்குவதற்காக 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை அதானி குழுமம் வாங்கியுள்ளது. அதுவும் 14 வங்கிகளில் பெரிய தொகையை அதானி குழுமம் வாங்கியுள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கைக்கு முன்பே 500 மில்லியன் கடன் வாங்குவது குறித்து அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடனுக்கு பதிலாக பாண்ட் எனப்படும் பத்திரத்தை வழங்கவும் அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. துபாயில் இருந்து கிடைத்த பணத்தின் மூலம் ஹோலிகாம் நிறுவனம் வாயிலாக 2 சிமெண்ட் ஆலைகளை அதானி குழுமம் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.500 மில்லியன் டாலர் நிதியை ஸ்டான்டர்ட் சார்டட் , பார்க்ளேஸ்,டாய்ட்ச் வங்கி, பிஎன்பி பரிபாஸ், டிபிஎஸ், அபுதாபி வங்கி, கத்தார் வங்கி ஆகிய வங்கிகளில் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது.