செயற்கை நுண்ணறிவு சாதனம் வந்ததால் இந்த நிறுவன த்துக்கு கூடுதல் செலவு
ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும்போதும் பழைய நிறுவனம் போட்டியில் இருந்து மெல்ல விலகுவது இயல்புதான். இந்த வகையில் அண்மையில் களமிறக்கப்பட்ட chat gpt என்ற புதிய செயற்கை நுண்ணறிவு சாதனம் உலக கவனத்தை ஈர்தது வருகிறது.குறிப்பிட்ட இந்த உபகரணம் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் தருகிறது. இதனால கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவன தேடு பொறி பங்குகள் ஆட்டம் கண்டன. புதிய நுட்பம் உள்ளே வந்துவிட்டதால் அதனை ஆராய கோட் ரெட் எனப்படும் அவசர கால பணிகளை செய்ய கூகுள் அதன் பணியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.தேடும் பொருளை உடனடியாகவும் சரியாகவும் தருவதால் chatgpt கருவியை தங்கள் தளத்தில் தர கூகுளும், மைக்ரோசாப்ட் உம் விழித்துக்கொள் என சுறுசுறுப்பு அடைந்துள்ளனர் வழக்கமாக கூகுள் தேடலுக்கு ஆகும் செலவைவிட chat gpt க்கு 7மடங்கு வரை கூடுதல் செலவாகிறது . இந்த சூழலில் வரும் நாட்களில் இந்த கருவியை வாங்கிப்போட கூகுலும், மைக்ரோசாப்ட் உம் ஆர்வம் காட்டி வருகின்றன. கூகுளின் சாம்ராஜ்யத்தில் இது பெரிய தொகை இல்லை என்றாலும் , மைக்ரோ சாஃப்ட் குறைந்த விலையில் இந்த சேவையை பெற காய் நகர்த்தி வருகிறது. இதனால இரு நிறுவனத்தில் எதில் முதலீடு செய்வது என முதலீட்டாளர்கள் குழம்பி உள்ளனர்