வெளிநாட்டில் இந்திய கிரிடிட் கார்டு பயன்படுத்தினா கூடுதல் வரி..
ரிசர்வ் வங்கியும்-மத்திய நிதியமைச்சகமும் இணைந்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் இந்தியாவில் வாங்கப்பட்ட கிரிடிட் கார்டுகளை வெளிநாட்டில் பயன்படுத்தினால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் LRS வகையில் இது கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. LRS வகையில் வெளிநாட்டில் பணத்தை கிரிடிட் கார்டு வழியாக செலவழித்தால் TCS எனப்படும் வரி 20விழுக்காடு கூடுதலாக விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதைப்போல வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த புதிய வரி விதிப்பு அமலுக்கு வருகிறது
இதற்கு முன்பு வெளிநாடுகளில் இந்திய கிரிடிட் கார்டுகள் பயன்படுத்தினால் எந்த பெரிய வரியும் விதிக்கப்படாமல் இருந்தது.FEMA எனப்படும் வெளிநாட்டு பரிவர்த்தனை சட்டத்தில் 7ஆவது பிரிவில் கிரிடிட் கார்டுகளுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தது. இது தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது 2022-23நிதியாண்டில் மட்டும் இந்தியர்கள் 12.51 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருட்களை வாங்கிக்குவித்திருந்தனர். ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் 104 விழுக்காடு வழக்கத்தைவிட அதிகளவில் பரிவர்த்தனை செய்ததே இந்த வரிவிதிப்புக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஜூலை 1ஆம் தேதி வரை 5விழுக்காடு வரியும் அதன் பிறகு 20 விழுக்காடு வரியும் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் LRS விதிப்படி, 2 கோடியே 06 லட்சம் ரூபாய் வரை மட்டுமே, ஓராண்டில் வெளிநாடு செல்லும் நபர் செலவு செய்ய முடியும் , அதற்கு மேல் செலவு செய்தால் ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், 7 லட்சம் ரூபாய்க்கு மேல் சென்றாலே 5விழுக்காடு வரி அரசாங்கத்துக்கு செலுத்து வேண்டும் என்று அண்மையில்தான் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடுத்தகட்டமாகத் தான் இந்திய கிரிடிட்கார்டுகளுக்கு 20விழுக்காடு டிசிஎஸ் விதிக்கப்பட இருக்கிறது.