“வளர்ச்சி; ஆனால் வேலையின்மை வளர்ச்சி” – ரகுராம் ராஜன்
இந்தியப் பொருளாதாரம் அதன் பாதையில் மட்டுமல்ல, வேகமாகவும் இயங்குகிறது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
ராய்ப்பூரில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி வேலையின்மை வளர்ச்சியாகும்,” என்று கூறினார்
கடந்த காலங்களில், இந்தியா தனது இளைஞர்களுக்கு கல்வி கற்பதற்கான திறனை உருவாக்காமல் தோல்வியடைந்துள்ளது. மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் உள்ளனர் என்று ராஜன் தெரிவித்தார்.
சீனாவின் உற்பத்தித் துறை சார்ந்த வளர்ச்சியை கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல், சேவைத்துறைகளில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு குறுக்குவழிகள் எதுவும் இல்லை என்றார். “திறன் தளத்தை உருவாக்க முடிந்தால், வேலைகள் வரும்.” என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயகத்தைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது இந்தியாவில் குறைவாக உள்ளது – அது விளைவுகளை ஏற்படுத்தும் என்று ராஜன் எச்சரித்தார்.