தமிழக அரசின் வரலாற்றில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் ! வேளாண் பட்ஜெட் – 2021 – நேரலை !
வேளாண் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குவதாக அமைச்சர் நெகிழ்ச்சி!
வேளாண் பட்ஜெட் – 2021 – நேரலை
அடுத்த தலைமுறைக்கு கணினி பற்றி தெரியும் அளவுக்கு கழனி பற்றி தெரியவில்லை – அமைச்சர்.
காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு 15,000
12.50 கோடி – உழவர் சந்தைகளை மேம்படுத்த
- கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத்தொகை.
- பத்து மாவட்டங்களில் 10 புது உழவர் சந்தைகள் அமைக்க 6 கோடி ஒதுக்கீடு.
- சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்க 114 கோடி ஒதுக்கீடு.
- காய்கறி, கீரை சாகுபடியை அதிகரிக்க 95 கோடி ஒதுக்கீடு.
- மின் மோட்டார் பம்பு செட் மானியம் – 1 கோடி.
- ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய பி[பகுதிகளில் 10 கோடி செலவில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.
- கொல்லிமலையில் மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.
- 5 மாவட்டங்களில் தொழில் கற்கும் மையங்கள் அமைக்கப்படும்.
- 10 கோடி செலவில், மின்னணு ஏல முறை செயல்படுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் கருத்து கேட்ட பின்னரே வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
வேளாண் வணிகர்களையும் கருத்துக்கேட்ட பின்னரே வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகப்பதற்காக 36 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் மரக்கன்றுகளும் முழு மானியத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்திட மானியம் வழங்கப்படும்.
2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு.
முதலமைச்சர் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.146.64 கோடி நிதி ஒதுக்கீடு.
பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு. இந்த திட்டம் 52 கோடியே 2 லட்சம் செலவில் ஒன்றிய மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும்.
நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ரூ.25 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வழங்கப்படும்.
படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஊரக
இளைஞர் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் பயன்படுத்தப்படும்.
சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணை விவசாயிகள் திட்டம் செயல்படுத்தப்படும்.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போல கலைஞரின் வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிவிப்பு.
திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள அரசு விதைப்
பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் நடப்பாண்டில் 2500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.
வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென்று தனி பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.
தரிசு நிலங்களை மாற்றிட குளங்கள், பண்ணை குட்டைகள், கசிவுநீர் குட்டைகள் போன்ற நீர் ஆதாரங்கள் பெருக்கப்படும்.
சாகுபடி பரப்பு 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்தப்படும்.
இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
சர்வதேச நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்துள்ளோம், தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறும் பரப்பளவு 11.07 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக்கப்படும்.
தென்னை, கம்பு, சூரிய காந்தி உள்ளிட்ட பயிர்களில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை தமிழ்நாடு எட்டிட வழிவகை செய்யப்படும்.
வேளாண்மை என்ற சொல்லே நெடிய வரலாறு கொண்டுள்ளது.
10 லட்சம் எக்டர் அளவுக்கு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த 10 ஆண்டுக்குள் 20 லட்சம் எக்டர் ஆக உயர்த்தப்படும்.