உற்பத்தி துறையிலும் நுழைந்துவிட்ட ஏ ஐ
ஏஐ தொழில்நுட்பம் நுழையாத துறையே இல்லை என்று கூறும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவுத்துறை மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் பெரிதும் பயன்படும் வகையில் மாறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான மாருதி சுசுக்கி, அப்போலோ டயர்ஸ், கோத்ரேஜ் அண்ட் பாய்ஸ், செயின்ட் கோபெயின் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் தினசரி உற்பத்தியில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை களமிறக்க இருக்கிறது. இவை உள்ளே புகுந்ததால் உற்பத்தி செலவு குறைவதுடன் செயல்திறனையும் அதிகரித்து வருகிறது. அப்போலோ டயர்ஸ் நிறுவன மிக்சிங் பிரிவில் 8முதல் 10 விழுக்காடு செயல்திறன் கூடுதலாக கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. உற்பத்தி பிரிவில் டிஜிட்டல் பயன்பாட்டில் டேட்டா சயின்ஸ் பயன்படுத்துவதாக அப்போலோ டயர்ஸ் நிறுவன அதிகாரி கூறுகிறார். கால நிலை மாற்றம், பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் குறித்து ஆய்விலும் செயற்கை நுண்ணறிவு பயன்பட்டு வருகிறது. பங்குகள் சிறப்பாக இருக்கும் நிலை மற்றும் குறைவான வேலை திட்டங்கள் குறித்தும் அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வருகிறது. இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் தொழில்நுட்பம் மற்றும் தரவுபகுதிகளை அளித்ததன் மூலமாக கிளவுடு கணினி முறையில்த ரவுகள்பரிசீலிக்கப்படுவதால் ரோபோக்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. கோத்ரேஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனத்திலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. கண்ணாடிக்கு பெயர்பெற்ற செயின்ட் கோபெயின் நிறுவனமும் செயற்கை நுண்ணறிவு நுட்பம் கொண்ட கேமிராவை பயன்படுத்தி குறைகளை கண்டறிந்து வருகிறது.
இதனால் பணியாளர்களுக்கு காயம் ஏற்படும் அளவு குறைந்திருக்கிறது. மாருதி நிறுவனம் தனது இணையதளத்தில் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களை களமிறக்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வாட்ஸ் ஆப்பில் சாட் செய்வது போலே தங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ள முடிகிறது.