யூடியூப் தரவுகளை ஏஐ எடுக்கிறதா?
அண்மையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பங்கேற்று பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்தார். அதில் ஒன்றாக, ஓபன் ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு சாதனம் யூடியூபின் தரவுகளை எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை, தரவுகள் பயன்பாட்டில் தங்கள் நிறுவனத்துக்கு என்று தனியான விதிகள் இருப்பதாக கூறினார். செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பெரிய நிறுவனங்கள் அழகாக பயன்படுத்தி வரும் நிலையில் தனிப்பட்ட கண்டன்ட் கிரியேட்டர்கள் பாதக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. ,இதனை குறிப்பிட்டு பதில் அளித்த சுந்தர், தனிப்பட்ட நபர் சில நேரங்களில் உரிமம் சார்ந்த ஒப்பந்தத்தை மீறும் பிரச்சனைகளும் உள்ளது என்றார். செயற்கை நுண்ணறிவு என்பது மிகப்பெரிய மாற்றம் என்றும் தனிப்பட்ட கண்டென்ட் கிரியேட்டர்கள் இதனை உணர்வுபூர்வமாக அனுகுவதை சுந்தர் பிச்சை சுட்டிக்காட்டினார். கலைஞர்களுக்காகவே பிரத்யேகமாக செயற்கை நுண்ணறிவு இசை கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மிகவும் கவனமாக கருத்தில் கொண்டு கருவிகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். ஒரு காலகட்டத்தில் கூகுளில் தேடினால் 10 தரவுகள் வரும் ஆனால் தற்போது அந்த சூழல் மாறியிருப்பதையும், மிகவும் குறிப்பிட்டு தேடும் வசதியும் அமலுக்கு வந்திருப்பதாகவும் சுந்தர் பிச்சை நினைவு கூர்ந்தார்.