இந்தியாவில் வலுவாகும் ஏர்இந்தியா-விஸ்தாரா..
இந்தியாவில் பிரபல விமான நிறுவனமாக திகழும் ஏர் இந்தியாவும், விஸ்தாரா நிறுவனமும் முழுமையாக இணைவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இணைப்பு இந்தியாவில் சாத்தியமானால் வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் என்று தெரிவித்துள்ளது. ஏர்இந்தியாவும் விஸ்தாராவும் முழுமையாக இணைந்துவிட்டால் உள்நாட்டு,வெளிநாட்டு மக்கும் குறைந்த கட்டண விமான சேவையும் அளிக்க இயலும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2023-24 நிதியாண்டில் 2,675 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களை நிகர லாபமாக அறிவித்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் விஸ்தாரா-ஏர் இந்தியா நிறுவனங்கள் இணைந்துவிடும் என்று கூறப்படுகிறது. கிளப் விஸ்தாரா, பிளையிங் ரிட்டர்ன்ஸ் ஆகிய பிரிவுகள் இணைந்து இந்தாண்டு இறுதி வரை பணியாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கிளப்புகளுக்கும் இடையே புள்ளிகள் 1:1 என்ற கணக்கில் வழங்கப்படுகிறது. புள்ளிகள் வழங்கப்பட்ட நாளில் இருந்து 1 வருடம் வரை செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது