இந்தியா குறித்து விமான தயாரிப்பு நிறுவனத்தின் கருத்து!!!!
விமானங்களை தயாரிப்பதில் போயிங் நிறுவனத்துக்கு என தனி இடம் உண்டு, இந்தியாவில் பிரபல விமான நிறுவனங்கள் அடுத்தடுத்து சிக்கலை சந்தித்து வரும் சூழலில், இந்தியா ஒரு மிகப்பெரிய வாய்ப்புள்ள சந்தை என்று போயிங் நிறுவனத்தின் இந்திய வணிகப்பிரிவு தலைவர் ரயான் வயர் தெரிவித்துள்ளார். கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அண்மையில் திவால் நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் , உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கோஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விவகாரம் பற்றி தங்கள் நிறுவனமும் ஆலோசனை நடத்தி வருவதாகவும், கோஃபர்ஸ்ட் நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உற்று நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அடுத்து 20 ஆண்டுகளில் 2,210 விமானங்கள் தேவைப்படுவதாகவும்,அதில் 1983 விமானங்கள் சிங்கிள் ஐசல் ஜெட் வகையாக இருக்கும் என்றும் போயிங் நிறுவனம் கூறியுள்ளது. உலகத்திலேயே அதிக விமானங்கள் தேவை கொண்ட நாடு இந்தியா எனஅறும் ரயான் கூறியுள்ளார். இந்தியாவில் 2041ஆம் ஆண்டு விமான சேவை வளர்ச்சி விகிதம் 7விழுக்காடாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.