ஜியோ குழப்புகிறது என ஏர்டெல் குற்றச்சாட்டு..
இந்தியாவில் முன்னணி சிம்கார்டு சேவை வழங்கும் நிறுவனங்களாக ரிலையன்ஸ் ஜியோவும், பார்தி ஏர்டெல் நிறுவனமும் திகழ்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவை (FWA) வழங்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் eutelsat oneweb என்ற நிறுவனம் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. அதாவது ஒதுக்கப்பட்ட செயற்கைக்கோள் அலைக்கற்றையை FWA சேவையாக பயன்படுத்தக் கூடாது என்பதே ஏர்டெல் முன்வைக்கும் புகாராகும். செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவையும், வர்த்தக ரீதியிலான சேவையும் முற்றிலும் வேறு வேறானது என்று கூறியுள்ள eutelsat oneweb அதிகாரிகள், செயற்கைக்கோள் அடிப்படையிலான FWAசேவைகள் ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையில்தான் வழங்கப்படுவதாக கூறுவது தவறு என்றும் ஏர்டெல் வாதிட்டு வருகிறது. ஆப்பிள்களை ஆரஞ்சுகளுடன் ஜியோ தேவையில்லாமல் ஒப்பிடுவதாகவும் ஏர்டெல் நிறுவன அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 5ஜி அடிப்படையிலான சேவைகள் நேரடியாக மக்களுக்கு அளிக்கப்படும் என்றும், அதே நேரம் கேபிள்களே புதைக்க முடியாத அளவுக கடினமான இடங்களில் மட்டுமே செயற்கைக்கோள் அடிப்படையிலான செல்போன் சிம்கார்டு சேவைகள் உதவுகிறது. எனவே இயூட்டில்சாட் நிறுவனம் நேரடியாக செயற்கைக்கோள் அடிப்படையிலான FWaசேவையை மக்களுக்கு அளிக்கவில்லை என்றும், ஜியோவுடன் போட்டியிடவில்லை என்றும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். fwa எனப்படும் கம்பியில்லா இணைப்பு சேவையை மட்டும் இரு நிறுவனங்களும் மக்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.