ஏர்டெல் தலைவருக்கு இவ்வளவு சம்பள உயர்வா?
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் சுனில் மிட்டல். இவருக்கு 24 நிதியாண்டின் சம்பளம்92% உயர்ந்து 32.27 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதே நேரம் ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டலுக்கு வெறும் 10 விழுக்காடுதான் இன்கிரிமண்ட் அளிக்கப்பட்டுள்ளது. அவரின் சம்பளம் 18.5 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த 2021 முதல் 3 ஆண்டுகளாக அவரின் சம்பளம் 15 கோடி ரூபாயாகவே இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக ஏர்டெல் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாலும், தற்போது லாபத்தை ஈட்டி வருவதாலும்,சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
சுனில் மிட்டலின் 32.27 கோடி ரூபாய் சம்பளத்தில், 21.57 கோடி ரூபாய் நேரடி சம்பளமாகவும், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக 7.5 கோடி ரூபாயும்,மீத தொகையான 3.19 கோடி ரூபாயும் சம்பளத்தை வேறு வகையில் தருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 2047 ஆம் ஆண்டு 35 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா நகர்ந்து வரும் நிலையில் ஏர்டெலில் பிரகாசமான தொழில்வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பில் 5ஜி சேவை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்,