Airtel Payments வங்கி வாடிக்கையாளர் டெபாசிட் தொகை உயர்வு..!!
Airtel Payments வங்கி வாடிக்கையாளர்களுடைய டெபாசிட் தொகை முந்தைய ஆண்டை விட அதிகரித்து, 2021-ம் ஆண்டு 75% உயர்ந்து, ரூ.1.000 கோடியாக உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Airtel Payments வங்கி CEO தகவல்:
இதுகுறித்து, ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் எம்டி மற்றும் சிஇஓ அனுப்ரதா பிஸ்வாஸ் கூறுகையில், Airtel Payments வங்கி இந்த ஆண்டில் இதுவரை 35 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான சேமிப்புக் கணக்கு வைப்புகளுக்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தை விரைவில் வழங்கத் தொடங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிக பயனாளர்களை கொண்ட வங்கி:
2021 –ம் ஆண்டு, செப்டம்பர் 30-ல் முடிவடைந்த காலாண்டில் வங்கி லாபகரமாக மாறியது மற்றும் ஆண்டு வருவாய் ரூ.1,000 கோடியை எட்டியுள்ளது.
வங்கி நாடு முழுவதும் 11.5 கோடிக்கும் அதிகமான பயனர்கள் மற்றும் 80 மில்லியனுக்கும் அதிகமான வணிகர் தளத்துடன் வேகமாக வளர்ந்து வரும் வங்கியாக உள்ளது.
“17 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 1.27 லட்சம் கோடி) வருடாந்திர GMV (மொத்த வணிக மதிப்பு) மற்றும் ஆண்டு அடிப்படையில் ரூ. 1,000 கோடிக்கு அருகில் வருவாயுடன், Airtel Payments வங்கி செப்டம்பர் காலாண்டில் லாபம் ஈட்டியதாக அறிவித்தது,” பிஸ்வாஸ் தெரிவித்தார்.