இரண்டாம் காலாண்டில் 300 % லாபமீட்டிய ஏர்டெல் !
மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், செப்டம்பர் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 300 சதவீதம் அதிகரித்து ₹ 1734 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ₹ 28,326 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் 5.4 சதவீதம் ஆகும். கடந்த ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் இதன் வருவாய் ₹26,853 கோடி ரூபாயாக இருந்தது கடந்த ஆண்டில் ₹ 20,060 கோடி ரூபாயாக உயர்ந்து இருந்தது, இது அதன் வளர்ச்சியில் 13 சதவீதம் ஆகும்
இதனிடையே இதன் ARPU விகிதம் செப்டம்பர் காலண்டர் ₹ 153 ரூபாயாக அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டில் ₹ 143 ரூபாயாக இருந்தது, மொபைல் சேவைகள் மூலமாக வருவாய் 20.3 சதவீதம் அதிகரித்து 15,191 கோடி ரூபாயாக இருந்தது, இது குறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வயர்லெஸ் வணிகத்தில் வலுவான வளர்ச்சிக்கு ARPU விகிதம் ஒரு காரணம்.
ஏர்டெல் பேமென்ட் வங்கி, டேட்டா, மற்றும் டிஜிட்டல் சேவைகள் மூலமாக கிடைக்கும் வருவாய் ஆகியவை தொடர்ந்து உயர்கின்றன. எதிர்காலத்தில் 5ஜி சேவையானது வலுவான வளர்ச்சியை காணலாம். எங்களது 480 மில்லியன் வாடிக்கையாளர்கள் 16 நாடுகளில் உள்ளனர். எனவே வருவாய் வளர்ச்சியானது எதிர்காலத்தில் இன்னும் மேம்படும்” என்று தெரிவித்துள்ளது, பார்தி ஏர்டெல் நிறுவனம் இதே காலாண்டில் சென்ற வருடம் 63 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.