அக்சய திருதியை ஆட்டம் போட்ட தங்கம் விலை..

மே 10 ஆம் தேதியான அக்சய திருதியை தினத்தன்று, இந்திய பங்குச்சந்தைகள் உயர்வை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 72,664 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 97 புள்ளிகள் உயர்ந்து 22,055 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது., தேசிய பங்குச்சந்தையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகள் 4 விழுக்காடு உயர்ந்தன.விஜயா டயக்னாஸ்டிக்ஸ் 10 விழுக்காடும், டாடா மோட்டர்ஸ் நிறுவன பங்குகள் 2 விழுக்காடும் விலை உயர்ந்து முடிந்தன. பாலிகேப் நிறுவன பங்குகள் 5 %,ஆபட் 5% உயர்ந்து முடிந்தது. அதே நேரம் சிப்ளா நிறுவனம் 3 %, CAMS 6%, VST tillers நிறுவன பங்குகள் 6 விழுக்காடும் சரிவை கண்டன. அக்சய திருதியை நாள் என்பதால் தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை ஏற்றம் பெற்றது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன்ஆயிரத்து 240 ரூபாய் விலை உயர்ந்து 54ஆயிரத்து 160 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6770ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை, கிராமுக்கு இரண்டரை ரூபாய் உயர்ந்து 91 ரூபாய் 20 காசுகளாக விற்கப்படுகிறது.. கட்டி வெள்ளி விலை இரண்டாயிரத்து 500 ரூபாய் அதிகரித்து 91 ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.