ஆட்குறைப்பு செய்கிறது ஆல்பபெட்..
உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை அவ்வப்போது எட்டிப்பார்த்து பல ஆயிரக்கணக்கான பணியாளர்களின் வேலைவாய்ப்பை காலி செய்து வருவது வழக்கமாகும். இந்த நிலையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நீக்குவதற்கான பணிகளை அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது. ஆயிரக்கணக்கானோரை வேலையை விட்டு நீக்க முடிவெடுத்துள்ள ஆல்பபெட் நிறுவனம், அதில் திறமையான ஒரு சில பணியாளர்களை மட்டும் தக்க வைக்க திட்டமிட்டுள்ளது. ஆல்பபெட்டில் இருந்து வெளியேற்றப்படும் பணியாளர்கள் அதன் கிளை அலுவலகங்களிலேயே சிலரை பணி மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த காலாண்டில் அதிகம் பேரை பணிநீக்கம் செய்யும் பெரிய டெக் நிருவனமாக ஆல்பபெட் மாறியுள்ளது. அமேசான்,மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி இருந்தது. ஆல்பபெட் நிறுவனம் ஏற்கனவே 12,000 பணியாளர்களை இந்தாண்டே பணிநீக்கம் செய்திருந்தது. இது மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 6% ஆகும். அமெரிக்காவில் மட்டும்வேலைவாய்ப்பு குறைந்த அளவு 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அமெரிக்க வேலைவாய்ப்பு நிறுவனமான கிரே அண்ட் கிறிஸ்ட்மஸ் தெரிவித்துள்ளது.