MGM Studio-வை வாங்கிய Amazon.. எவ்ளோ விலை தெரியுமா..!?
உலகின் புகழ்பெற்ற படப்பிடிப்புத் தளங்களில் ஒன்றான எம்ஜிஎம் ஸ்டுடியோவை அமேசான் பிரைம் டைம் நிறுவனம் வாங்கியுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில், கடந்த 1924-ம் ஆண்டு Metro –Goldwyn-Meyer என்ற புகழ்பெற்ற படப்பிடிப்பு தளம் உருவாக்கப்பட்டது.
ஜேம்ஸ்பாண்ட், ராக்கி உள்ளிட்ட பல்வேறு புகழ் பெற்ற திரைப்படங்கள் மற்றும் சிறுவர்களின் சிறந்த பொழுதுபோக்கு கேலிச்சித்திர படமான டாம் அண்ட் ஜெர்ரி உள்ளிட்ட திரைப்படங்கள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த எம்ஜிஎம் ஸ்டுடியோவை அமேசான் பிரைம் டைம் 64 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அமேசான், எம்ஜிஎம் நிறுவன ஊழியர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் அனைவரும் அமேசான் நிறுவனத்தில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அமேசான் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை விலைக்கு வாங்குவது மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது எம்ஜிஎம் ஸ்டுடியோவை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.