சிறு நகரங்களை குறிவைக்கும் அமேசான்..
அமேசான் நிறுவனத்தின் பேமண்ட் பிரிவான அமேசான் பே, சிறிய நகரங்களை குறிவைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனை திட்டத்தை பாதுகாப்பாக செய்ய பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது வரை அமேசான் பேவில் யுபிஐ, கிரிடிட் கார்டுகள் மற்றும் வாலட்களின் மூலம் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடைகளில் அதிக கவனம் செலுத்த அமேசான் முடிவெடுத்துள்ளது. கிரிடிட் கார்டு வசதிக்காக அமேசான் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டாக 42லட்சம் பயனாளர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். இது தனியார் கிரிடிட் கார்டு பயன்பாட்டில் 28 விழுக்காடாகும்
சிறிய நகரங்களில் தற்போது வேகமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடப்பதாகவும், 2 மற்றும் 3 ஆம் தர நகரங்களில்தான் அதிக டிஜிட்டல் பேமண்ட் செய்யப்படுவதாகவும் ஒரு புள்ளி விவரத்தை அமேசான் நிறுவன அதிகாரி பன்சால் சுட்டிக்காட்டுகிறார். முன்பெல்லாம் பெரிய நகரங்களுக்கும் சிறிய நகரங்களுக்கும் இடையே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் பெரிய இடைவெளி இருந்த நிலையில் தற்போது அந்த இடைவெளி 10 விழுக்காடாக குறைந்திருக்கிறது என்றும் பன்சால் சுட்டிக்காட்டியுள்ளார்.