சம்பளம் வாங்காமல் அம்பானிக்கு 5 ஆண்டுகள் பதவி…
வரும் 2029ஆ வரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக முகேஷ் அம்பானியை நியமிக்க ரிலையன்ஸ் நிறுவனம் பங்குதாரர்களிடம் கருத்துகளை கேட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளாக சம்பளமாக எதுவும் வாங்காமல் முகேஷ் அம்பானி பணியாற்றும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 66 வயதாகும் முகேஷ் அம்பானி,70 வயதை கடந்தும் பணியில் இருக்க சிறப்பு விதி அந்நிறுவனத்தில் மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 1977ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குநரக குழுவில் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார்.திருபாய் அம்பானி கடந்த 2002-ல் மறைந்ததும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை பதவியை முகேஷ் அம்பானி ஏற்றுக்கொண்டார். முகேஷ் அம்பானியை ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக தேர்ந்தெடுக்க ரிலையன்ஸ் நிர்வாக குழு கடந்த ஜூலை 21 ஆம்தேதி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்த 2009 முதல் கடந்த 2020நிதியாண்டுவரை முகேஷ் அம்பானிக்கு ஆண்டு சம்பளமாக 15 கோடி ரூபாய் அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா காலகட்டத்தில் 20 மற்றும் 21 நிதியாண்டில் சம்பளத்தை வாங்காமல் பணியாற்றுவதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். முகேஷ் அம்பானி கேட்டுக்கொண்டதை அடுத்து ஏப்ரல் 29,2029 வரை அம்பானிக்கு ரிலையன்ஸில் சம்பளம் கிடைக்காது. அம்பானியின் உறவினர்களான நிகில் மற்றும் ஹிட்டல் மெஸ்வானியின் சம்பளம் 25 கோடி ரூபாயாக இருக்கிறது. முகேஷ் அம்பானியின் மனைவியான நீடா அம்பானியின் சம்பளமாக 6 லட்சம் ரூபாயும், தரகு தொகையாக ஆண்டுக்கு 2 கோடி ரூபாயும் அளிக்கப்பட்டு வருகிறது.