6.1 கோடி பங்குகளை வாங்கிய அம்பானி

6.1 கோடி பங்குகளை வாங்கிய அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் இருந்து அண்மையில் நிதி சேவை நிறுவனம் தனியாக பிரிக்கப்பட்டது. பின்னர் அது ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்ற நிறுவனமாக புதிதாக உருவாக்கப்பட்டது.ஜியோ பினான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகளில் ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸின் பங்களி்ப்பு 46.77%ஆக உயர்த்தப்பட்டு,ஆகஸ்ட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் 6கோடியே 1 லட்சம் பங்குகளை அம்பானியின் குழுவினரே வாங்கியுள்ளனர்.
அதன் பரஸ்பர நிதி பங்களிப்பு 6.21%-ல் இருந்து தற்போது 4.71%ஆக குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்களிப்பும் 26.4%-ல் இருந்து 21.5%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு செப்டம்பரில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகளில் 6.66%ஐ எல்ஐசி நிறுவனம் வாங்கியிருந்தது. சிங்கப்பூர் அரசாங்கமும் ஜியோ நிதி நிறுவனத்தில் குறிப்பிடத்தகுந்த முதலீடுகளை செய்திருக்கிறது.
செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் 668 கோடி ரூபாயாக இருக்கிறது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு மொத்தமாக 1லட்சத்து 15ஆயிரத்து631 கோடி ரூபாயாக உள்ளது. ஜியோ நிதி நிறுவனம் கொஞ்சம் பகட்டாக தெரிந்தாலும் மிகச்சிறந்த வளர்ச்சி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.