வால்ட் டிஸ்னியின் இந்திய பிசினஸை வாங்கும் அம்பானி
வால்ட் டிஸ்னி நிறுவனம் உலகளவில் கடனால் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் பல பணியாளர்களை பணி நீக்கமும் செய்து வருகிறது. இந்த சூழலில் வால்ட் டிஸ்னியின் இந்திய வணிகத்தை பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி வாங்க இருக்கிறார்.அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு செயல்படும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் இந்திய பங்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அம்பானி வாங்க திட்டமிட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அடுத்த மாதம் ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் சில டிவி பிஸ்னசை அம்பானி வாங்க இருக்கிறார். டிஸ்னியும் தனது சிறிய பங்குகளை வைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை வாங்கி இலவசமாக மக்கள் பார்க்க வைத்து புதிய ரூட்டை போட்டுக் கொடுத்த அம்பானியிடமே விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல்லை ஜியோ சினிமா செயலியில் ஒளிபரப்பி இருந்தாலும், கால்பந்து உலகக்கோப்பை , உள்ளூர் இந்திய போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியிடம் இருந்து ஜியோ சினிமா தட்டிப்பறித்துள்ளது. ஹச் பிஓ ஷோக்களையும் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார்.
ஓடிடி நிறுவனங்களி்ல் விளையாட்டுப்போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பும் திட்டத்தை முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்திய நிலையில் அதையே தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செய்து நல்ல லாபம் பார்த்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட்டை மட்டும் நான்கரை கோடி பேர் செல்போன்களில் கண்டு ரசித்து உலக சாதனை படைத்திருக்கின்றனர்.