73,470 கோடி ரூபாய் இழந்தார் அம்பானி..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளராக முகேஷ் அம்பானி இருக்கிறார். இவருக்கு ஒரே நாளில் 73470 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பின்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 9லட்சத்து 76 ஆயிரத்து 320 கோடி ரூபாயாக உள்ளது. திங்கட்கிழமை மட்டும் அந்நிறுவனத்துக்கு 73ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதி வரை ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5 விழுக்காடு சரிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 3 விழுக்காடு சரிந்தன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 3.49 விழுக்காடு சரிந்து, 3 ஆயிரத்து 1 ரூபாய் 10 பைசாவாக இருந்தது. பங்கு வர்த்தகத்தின்போது அந்நிறுவன பங்குகள் 2998 ரூபாய் வரை சரிந்தன. 1.90 லட்சம் பங்குகள் மும்பை பங்குச்சந்தையிலும், தேசிய பங்குச்சந்தையில் 98.37 லட்சம் பங்குகளும் வணிகம் நடந்தன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 15,138 கோடி ரூபாயாக இருந்தது. 2023-24 நிதியாண்டில் இந்த லாபம் 16,011 கோடி ரூபாயாக இருந்தது.