மாஸ் காட்டிய அம்பானி! பிரபல நிறுவனத்தின் பங்குகளை கைப்பற்றியது ரிலையன்ஸ்!
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வின் நிறுவனமான எம்எம் ஸ்டைல்ஸ் லிமிடெட்டில் 40% பங்குகளை ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கைப்பற்றல் மூலம் ஆடம்பர மற்றும் டிசைனர் பிரிவு ஆடை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் ரீடைல் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று கூறப்படுகிறது.
எம்எம் ஸ்டைல்ஸ் லிமிடெட் 2005-ல் மணீஷ் மல்ஹோத்ரா வால் தொடங்கப்பட்டது. இவர் இந்தியாவின் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களுக்கும், பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கும் ஸ்டைலிங் மற்றும் ஆடை வடிவமைப்பு என சுமார் 30 வருடங்களாகப் பணியாற்றி வருகிறார். எம்எம் ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாக மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடத்தில் 4 ஆடம்பரமான ஷோரூம் உள்ளது. இது மட்டும் அல்லாமல் மனிஷ் மல்ஹோத்ரா பிராண்டுக்கு இணையத்தில் 1.2 கோடி வாசகர்கள் உள்ளனர்.
இந்திய ஆடை கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் மிகவும் சிறப்பான பயணத்தில் மனிஷ் மல்ஹோத்ரா வின் எம்எம் ஸ்டைல்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளதில் மகிழ்ச்சி அடைகிறோம் என ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் தலைவரான ஈஷா அம்பானி தெரிவித்துள்ளார்.
தற்போது ரிலையன்ஸ் ரீடைல் உடன் சேர்ந்து மனிஷ் மல்ஹோத்ரா வின் எம்எம் ஸ்டைல்ஸ் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் வர்த்தகத்தை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் விரிவாக்கம் செய்ய முடியும். ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், பர்பெர்ரி குரூப் பிஎல்சி, ஹ்யூகோ பாஸ் ஏஜி மற்றும் டிஃப்பனி & கோ உள்ளிட்ட பல ஆடம்பர சர்வதேச பிராண்டுகளுடன் கூட்டாண்மை கொண்டுள்ளது.