இந்தியாவை குறிவைக்கும் AMD..
சிப் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி இந்தியாவின் புதிய டிரெண்டிங் துறையாக இருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரான் என்ற நிறுவனம் இந்தியாவில் குறிப்பாக குஜராத் மாநிலம் சனந்த் என்ற இடத்தில் தனது ஆலையை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் amd நிறுவனம் தனது உலகளாவிய வடிவமைப்பு மையத்தை பெங்களூருவில் அண்மையில் திறந்திருக்கிறது.
உலகளவில் இருக்கும் செமிகண்டர்கள் மதிப்பு சங்கிலியின் உச்ச நிலையாக பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ள ஏஎம்டி நிறுவன ஆலை உருவெடுத்திருக்கிறது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் செமி கண்டக்டர் உற்பத்தியில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் சிக்கல் நிலவி வரும் இந்த சூழலில் இந்தியா இந்த துறையை விரிவுபடுத்த விரும்பி வருகிறது.
செமிகண்டக்டர் உற்பத்தியை காட்டிலும் அதனை வடிவமைப்பதில் தான் 50%பணிகள் இருக்கின்றனவாம். அதிலும் வேஃபர் ஃபேப்ரிகேஷன் துறை மட்டும் 24%மதிப்பு கொண்டதாக இருக்கிறது. இந்த சிப் வடிவமைப்பதில் இப்போது வரை அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இப்போது வரை தைவான்,சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் இந்த சிப் உற்பத்தி நடந்து வந்தது. இதை தற்போது இந்தியா கையில் எடுத்திருக்கிறது. சிப் உற்பத்தி என்பது சீனா அல்லது தைவான் இருநாடுகளை மட்டுமே சர்வதேச நாடுகள் நாடியிருந்தன. இது பாதுகாப்பிலும் மற்ற நாடுகளை அச்சுறுத்தம் செயலாக பார்க்கப்பட்டது. உற்பத்தி மற்றும் டிசைன் சார்ந்த ஊக்கத் தொகையை அறிவிக்க இருக்கும் காரணத்தால் இந்த திட்டம் உலகளாவிய சிந்தனையில் வேறொரு மதிப்பை இந்தியாவுக்கு அளிக்கும். இந்தியாவில் அட்டகாசமான தனித்துவ திறமைகளை காட்டி, பெருமளவு இந்த துறைகளில் ஜொலிக்க பிரகாச வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது.