“அமெரிக்கா தலையிடாது..”
ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவும் போர்ப்பதற்றம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி அளித்திருக்கிறார். அதில் ஈரானுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் அமெரிக்கா எடுக்காது என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, இஸ்ரேல் பகுதியில் இருந்து சிரியாவை நோக்கி சென்ற ஏவுகணைகள் ஈரானிய துணை தூதரகத்தில் சென்று விழுந்தது. இதில் ஈரானைச் சேர்ந்த முக்கிய தளபதிகள் இருவர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான் , இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இதையடுத்து இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் வீசியது. இந்த விவகாரம் குறித்து சனிக்கிழமை பேசிய பைடன், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு தேவையில்லாதது என்றார். அமெரிக்க வெள்ளை மாளிகையைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இது பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். அதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தற்காப்புக்கு உதவுமே தவிர்த்து, ஈரானுடன் இஸ்ரேல் போரிடுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்று கூறியுள்ளார். இந்த பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அவர் கூறினார்.