அமெரிக்க அதிபரே பாராட்டிய இந்தியர் !!!!
நாடுகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பணிகளுக்காக நிதி தரும் அமைப்பாக உலக வங்கி திகழ்கிறது. இந்த வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான அஜய் பங்கா அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். அவரை முதலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் பரிந்துரைத்தார். அஜய் பங்காவை பற்றி மீண்டும் புகழ்ந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அஜய் பங்கா ஒரு உருமாற்றத்தை பெரிய சமூக மாற்றத்தையே ஏற்படுத்தும் தலைவராக இருப்பார் என்று கூறியுள்ளார். வறுமை ஒழிப்பை பிரதானமாக கொண்டுள்ளது உலகவங்கி,தற்போது காலநிலை மாற்றமும் இந்த வங்கியின் பிரதான கொள்கைகளில் ஒன்றாக மாறியுள்ளது. உலகத்தில் முக்கிய தலைவர்கள்,தனியார் நிறுவனங்கள், நல்ல சிந்தனை உள்ளவர்களை ஒன்றிணைக்கும் பணியில் அஜய் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புவதாகவும் அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட நாள் முதல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றுள்ள அஜய் பங்காவுக்கு பல நாடுகளிலும் உற்சாக வரவேற்பு உள்ளது.வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள், காலநிலை மாற்றம், புதுப்புது நோய்கள் உள்ளிட்டவற்றிற்கும் உலக வங்கிக்கும் உள்ள பொறுப்புகள் குறித்தும் அஜய் பங்கா நன்கு தெரிந்து வைத்திருப்பதாகவும் உலக வங்கி அதிகாரிகள் புகழ்ந்துள்ளனர்.