ஆங்கிரி பேர்ட் நிறுவனத்துக்கு அடிக்குது ஜாக்பாட்!!!
டிஜிட்டல் புரட்சி எனப்படும் 4ஜி நுட்பம் இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்பே உலகளவில் பெரிய வசூலை திரைப்படங்களாக வாரிக் குவித்த படம் ஆங்க்ரி பேர்ட். Rovio Entertainment என்ற ஃபின்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் இந்த கதாப்பாத்திரங்களை உருவாக்கியது. இந்த நிலையில் குறிப்பிட்ட இந்த படம் பின்னர் வீடியோ கேம் வடிவமும் பெற்றது. இந்தசூழலில் ரோவியோ நிறுவனத்தினை வாங்க ஜப்பானைச் சேர்ந்த செகா சேமி ஹோல்டிங்க்ஸ் என்ற நிறுவனம் 776 மில்லியன் அமெரிக்க டாலர்களை தர இசைவு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லாமல் டீல் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோவியோ நிறுவனத்தை வாங்க இஸ்ரேலைச் சேர்ந்த பிளேடிகா என்ற நிறுவனம் 683 மில்லியன் யூரோக்களை அளிக்க முன்வந்தது. ஆனால் ரோவியோ நிறுவனத்துக்கும் பிளேடிகோவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் தோல்வியில் முடிந்தது. கடந்த மாதம் இஸ்ரேல் நிறுவனம் வேண்டாம் என்று விலகிய நிலையில் இந்த மாதம் ஜப்பான் நிறுவனம் ரோவியோவை கிட்டத்தட்ட கைப்பற்றிவிட்டது என்றே சொல்லும் அளவில் டீல் முடிந்துள்ளதாக வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.