அனில் அம்பானிக்கு 4 ஆயிரம் கோடி வருவாய் வருதாம்..
பிரபல தொழிலதிபரும், ஒரு காலத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்தவருமான அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்க இருக்கிறது.
முகேஷ் அம்பானியின் தம்பியான அனில் அம்பானி கடந்த சில வாரங்களாக தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். கட்கோபர்-வெர்சோவா மும்பை மெட்ரோ ஒன் என்ற நிறுவனத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்டரக்சர் நிறுவனத்துக்கு 74 விழுக்காடு பங்கு உள்ளது. இந்த நிறுவனத்துக்கும், பாரதஸ்டேட்வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கிக்கும் இடையே திவால் பிரச்தனை இருந்து வந்தது. இந்நிலையில் நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை இந்த இருவங்கிகளும் முறையிட்டனர். அதில் 1711 கோடி ரூபாய் பணத்தை 6 நிறுவனங்கள் இணைந்து மும்பை மெட்ரோ திட்டத்துக்காக ஒதுக்கியதாகவும், அந்த பணம் திரும்ப வரவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கார்பரேட் திவால் விதிகளுக்கு உட்பட்டு ஒருமுறை செட்டில்மண்ட்டாக அனில் அம்பானிக்கு எதிராக வங்கிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு ஒரு முறை தொகை ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டரக்சர் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என்று தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. பிரச்சனை முடிந்துள்ள நிலையில் மும்பை மெட்ரோ ஒன் நிறுவனத்துக்கும், MMRDA நிறுவனத்துக்கும் பணத்தை அளிக்க மகாராஷ்டிரா அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் மொத்த தொகையில் 74 விழுக்காடான 4 ஆயிரம் கோடி ரூபாய் முகேஷ் அம்பானியின் நிறுவனத்துக்கு அளிக்க மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.