அமேசானுக்கு அடுத்தடுத்த பேரிடி…
8 கோடிக்கும் அதிகமான பொருட்களை மட்டும் விற்கவில்லை அமேசான், பல பெரிய டெக் நிறுவனங்களுக்கு போட்டியாகவும் பல சேவைகளை செய்துவருகின்றனர். அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளிலும் கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக கிளவுடு சேவையையும் அமேசான் வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஏப்ரலில் கிளவுடு சேவையில் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போதுமான ஆட்கள் இல்லாமலும், போட்டியாளர்களான மைக்ரோசாஃப்ட் கூகுள் ஆகியவற்றுடன் போட்டியிட முடியாமலும் அமேசான் நிறுவனம் திணறி வருகிறது. 125 பில்லியன் லாபத்தை சில நொடிகளில் அந்த நிறுவனம் பங்குச்சந்தைகளில் இழந்துள்ளது. அந்த நிறுவனத்தின் மூத்த நிதி அதிகாரி் பிரையன் பேசும்போது, மக்கள் கிளவுடு சேவைகளை குறைத்துக்கொண்டுள்ளதாக கூறியதும் அந்த நிறுவன பங்குகள் 2 விழுக்காடு வரை சரிந்துள்ளது. ஏற்கனவே அந்த நிறுவனம் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை கடந்த நவம்பரில் இருந்து 27 ஆயிரம் பேரை நீக்கியுள்ளனர். மேலும் கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் தங்களுக்கென்று தனியாக செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை கிளவுடு சேவையிலும் களமிறக்கியுள்ளது. இதுவும் அமேசான் நிறுவன சரிவுக்கு பெரிய காரணிகளாக கூறப்படுகிறது.அமெரிக்காவில் படிப்படியாக பணவீக்கம் சரிந்து வருவதால் அமேசானின் வருவாயும் அதிகரித்து வருவதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு பக்கம் அடுத்தடுத்து பணிநீக்கம் நடந்து வந்தாலும், நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை அதிகரித்து வருவதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ ஆண்டி ஜாசி கூறியுள்ளார்.